மருதானை ரயில் நிலையத்தில் பதற்றம்

ஐக்கிய தேசியக்கட்சியின் உண்மையை கண்டறியும் குழுவைச்சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மருதானை ரயில் நிலையத்திற்குள் செல்வதற்கு முயற்சித்த வேளையில் அங்கிருந்த ஊழியர்கள் 'ஹூ' சத்தம் எழுப்பி கூக்குரல் இட்டமையில் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக அங்கியிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.

இந்த குழுவின் முதலாவது கண்காணிப்பு பயணம் கொள்ளுப்பிட்டியில் இன்றுக்காலை நிறைவடைந்தது.

இரண்டாவது கண்காணிப்பு பயணம் அளுத்கமை வரையிலும் மேற்கொள்ளப்படவிருந்தது.

அளுத்கமை, கொழும்பு ரயில்சேவைகள் இன்று இரத்து செய்யப்பட்டிருந்தமையினால் கண்காணிப்பு பயணத்தை மேற்கொள்வதற்கு பாணந்துறை ரயில் நிலையத்திற்கு சென்றிருந்த ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினரால் ரயில்களில் ஏறமுடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது.



Related

உள் நாடு 2566754978771744603

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item