குருநாகல் – களுகல்ல வீதி விபத்தில் ஒருவர் பலி!
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_355.html
குருநாகல் ஹிரிபிடிய – களுகல்ல பிரதான வீதியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். லொரியொன்று மோட்டார் வண்டியின் மீது மோதியதனால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்த இடத்திலேயே மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு விபத்தில் பலியானவர் 60 வயதையுடைய ஒருவர் எனவும், லொரியின் சாரதி வெல்லவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று சற்று முன்னர் அறிவித்துள்ளது