கோரிக்கைக்கு நியாயம் கிடைக்காவிடின் 20-21 இல் போராட்டம்! சுகாதார ஊழியர்கள்
http://newsweligama.blogspot.com/2014/08/20-21.html
ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோருடனான பேச்சுவார்த்தையின் பின்னரும் தமது கோரிக்கைகளுக்கு நியாயம் கிடைக்காது போனால் சுகாதார சேவையின் எழுதுவினைஞர்கள் தரத்துக்குக் கீழுள்ள சகல பிரிவுகளிலும் பணியாற்றும் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எதிர்வரும் 20 ஆம் 21 ஆம் திகதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ஐக்கிய சுகாதார சேவை சங்கத்தின் செயலாளர் டீ.விமலசேன தெரிவித்துள்ளார்.