பொதுபல சேனாவைத் தடுத்த பொலிஸாருக்கு நன்றி – ஹுனைஸ் பாறூக் எம்.பி.
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_372.html
ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்தினரின் ஊர்வலத்திற்குள் அத்துமீறிய பொதுபல சேனாவினரை தடுத்து நிறுத்திய பொலிஸாருக்கு ஹுனைஸ் பாறூக் எம்.பி. நன்றி தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனாவின் இவ்வாறான செயற்பாட்டை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். மேலும் இவர்களது இவ்வாறான நடவடிக்கை தொடருமானால் இந்த நாட்டின் எதிர்காலமும் இந்த நாட்டில் வாழுகின்ற சிறுபான்மை மக்களினது வாழ்க்கையும் கேள்விக்குறியாக மாறிவிடும். எனவே பொதுபல சேனாவின் இவ்வாறான மிலேச்சத்தனமான நடவடிக்கையை அரசு தடுத்து நிறுத்துவதோடு இவர்களின் பயணத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.