குர்திஸ்தான் விமான நிலையத்தில் பணியாற்றும் இலங்கை பணியாளர்கள் பாதிப்பு
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_18.html
தொழில் நிமித்தம் சென்று வட ஈராக்கில் குர்திஸ்தான் இராணுவத்தினர் வசம் உள்ள 27 இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதில் காலதாமதம் ஏற்படும் என ஈராக்கில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள யுத்த சூழலே இதற்கு காரணம் என தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
ஈராக்கின் வட பிரதேசமான குர்திஸ்தானின் ஏர்பில் பகுதியில் மாத்திரம் தொழில் நிமித்தம் சென்றுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமாகும்.
எனினும், அவர்கள் அனைவரினதும் தகவல்கள் ஈராக்கில் அமைந்துள்ள இலங்கை தூதரக வசம் இல்லையென பதில் தூதுவர் எச்.எஸ்.பிரேமசிறி தெரிவித்தார்.
ஈராக்கில் இலங்கை தூதரகம் 2012 ஆம் ஆண்டிலேயே ஸ்தாபிக்கப்பட்டது.
இவர்கள் இதற்கு முன்னர் பல்வேறு வழிகளில் ஈராக்கிற்கு சென்றுள்ளதாக தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஏர்பில் பிரதான விமான நிலையத்தில் பணியாற்றிய 37 இலங்கையர்களே இவ்வாறு குர்திஸ்தான் இராணுவம் வசம் உள்ளனர்.
இவர்களில் 10 பேர் நேற்று நாட்டை வந்தடைந்தனர். எஞ்சிய 27 பேரை மீட்கவேண்டிய தேவையே தற்போது காணப்படுகின்றது