தெளஹீத் ஜெமாஅத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ஹெல உறுமய
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_971.html
நீதிமன்ற உத்தரவை மீறி ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமைய காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பொது பல சேனா, சிங்கள ராவய,ராவணா பலய மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் ஆகிய அமைப்புகளுக்கு கொழும்பு மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் கடந்த 13ஆம் திகதி ஊர்வலங்கள் மற்றும் எதிர்ப்பார்ப்பாட்டங்கள் மேற்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தடை வித்தித்திருந்தது.
இந்த உத்தரவினை மீறிய ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொழும்பு மாளிகாவத்த பிரதேசத்தில் ஊர்வலம் மற்றும் எதிர்ப்பார்ப்பாட்டங்களை அன்றைய தினம் நடத்தியது.
இந்நிலையில், இந்த செயப்பாட்டுக்கு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமைய கோரிக்கை விடுத்துள்ளது