சகோதரத்துவத்திற்கான சகோதரத்துவ கருத்தரங்கு!
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_40.html
நாட்டின் தற்போதைய பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு, இனங்களிடையே புரிந்துணர்வை வளர்க்கும் நோக்கோடு அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் வெலிகம கிளை, “சகோதரத்துவத்திற்கான சகோதரத்துவ ஒன்றுகூடல்” என்ற தொனிப்பொருளில் கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்துள்ளது.
எதிர்வரும் 09 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 - 12.15 வரை இக்கருத்தரங்கு வெலிகம அறபா தேசிய பாடசாலையின் வெபா மண்டபத்தில் சிறந்த வளவாளர்களைக் கொண்டு நடாத்தப்படவுள்ளது. நிகழ்வில் கலந்துகொண்டு இனங்களிடையே புரிந்துணர்வோடு செயற்படுவதற்கு வருகை தருமாறு வை.எம்.எம்.ஏ வெலிகம கிளை வேண்டுகோள் விடுத்துள்ளது.
(கலைமகன் பைரூஸ்)