பௌத்த மதத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்: ஜனாதிபதி
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_406.html
பௌத்த மதத்தை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கண்டி அசல பெரஹரா நிறைவு நிகழ்வுகளில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் பௌத்த மதத்திற்கு எதிராக செயற்படுவதாக போலிப் பிரச்சாரம் செய்யப்படுகின்றது. இதில் எவ்வித உண்மையும் கிடையாது.
சட்டமொன்று பற்றி தெரியாவிட்டால் அது பற்றி பேசாமல் இருப்பதே முக்கியம்.
சட்டமொன்று பற்றி தெரியாமல் அது குறித்து பேசி பிழையான கருதுகோள்களை உருவாக்கக் கூடாது.
வலுவான ஓர் செயற்திட்டத்தின் மூலம் பௌத்த மதத்தை உலகிற்கு எடுத்துச் செல்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
மத நல்லிணக்கத்தைப் போன்றே மத மேம்பாட்டுக்காகவும் அரசாங்கம் பாரியளவில் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
தலதா மாளிகையை பாதுகாத்துக் கொள்ள முடியாத யுகமொன்று நாட்டில் இருந்தது.
பௌத்த மதத்திற்கு மட்டுமன்றி கோவில், பள்ளிவாசல், தேவாலயங்களுக்கும் இன்று பாதுகாப்பு கிடைத்துள்ளது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.