புத்தசாசனத்தை அழிக்கும் திட்டம் சூசகமாக இடம்பெற்று வருகின்றது - அஸ்கிரி மகாநாயக தேரர்
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_47.html
இன்று அரசாங்கத்தின் கீழ் புத்த சாசனத்தை அழிவுக்குட்படுத்தும் வேலைத்திட்டம் சூசகமாக இடம்பெற்று வருகின்றது. பௌத்த மத பிக்குகள் என்ற வகையில் இதனை எந்த பயமும் இல்லாமல் எம்மால் கூற முடியுமென்றும் அஸ்கிரி மகாநாயக தேரர் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை தஹம் பாடசாலை தினத்தின் 119 ஆவது வைபவம் 03 ஆம் திகதி மாத்தளை ஹோட்டல் பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது அனுசாசனம் வழங்குகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்
பௌத்த விகாரைகளில் நிர்மாணப் பணிகள் எதுவும் நடைபெறும் சந்தர்ப்பங்களில் எழுத்து மூலமாக விகாரைகளை அரசுக்கு ஒப்படைக்க வேண்டுமென ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பௌத்த விகாரைகளுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் நிதி தொடர்பான ஆவணங்களில் கையொப்பமிட வேண்டாம். அப்படி கையொப்பமிட்டால் அந்தக் காணியின் உரிமை அரசுக்கு சென்று விடும்.
எதிர் காலத்தில் வரப்போகும் தேர்தல்களில் இவ்வாறு பௌத்த சாசனத்தைப் பாழடிப்பவர்களுக்கா வாக்களிக்கப் போகிறீர்கள்? என்று பிரசாரங்கள் வரலாம். அது தவிர்க்க முடியாதது. அரசால் மேற்கொள்ளப்படும் இந் நடைமுறை பற்றி பிரதமருக்குத் தெரியுமா என்பது பற்றி எமக்குத் தெரியாது. நமது நாட்டின் பிரதமர் இது பற்றித் தெரிந்திருக்க வேண்டும். விகாரைக்குச் சொந்தமான காணியை எழுத்து மூலமாக அரசுக்கு எடுக்கும்படி மாகாண சபைகள் அறிவித்துள்ளன. உங்களை பிரதமர் பதவியிலிருந்து நீக்கும்படி எமக்கு இரகசிய தகவல் வந்தது என்றாலும் நாங்களே உங்களை பிரதமராக நியமிக்க கோரிக்கை விடுத்தோம்.
புத்த சாசனத்தை இல்லாதொழிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளும் மாகாண சபை அறிவித்தல்களை நாம் கண்டிக்கிறோம் என்றார். - Virakesari