தபால் கட்டணம் நாளை முதல் அதிகரிப்பு
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_74.html
உள்நாட்டு தபால் கட்டணங்கள் நாளை வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரோஹன அபேசிங்கதெரிவித்தார்.
சாதாரண தபாலுக்கான முத்திரைக் கட்டணம் ஐந்து ரூபாவிலிருந்து 10 ரூபாவாகவும் தபாலட்டையின் விலை 8 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
20 கிராம் வியாபாரக் கடிதங்களின் கட்டணம் 15 ரூபாவாகவும் அதற்கு மேற்பட்ட ஒவ்வொரு கிராமுக்கும் பத்து ரூபா வீதம் முதல் அறவிடப்படும். பொதிகளுக்கான தபால் கட்டணம் 250 கிராமிற்கு 90 ரூபாவும் 500 கிராமிற்கு 150 ரூபாவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பதிவுத் தபால்களுக்கான தற்போதைய கட்டணங்களில் மாற்றமில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 31ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.