வரட்சி நீங்கியது - பல பிரதேசங்களுக்கு பலத்த மழை
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_470.html
பல மாதங்களாக கடும் வரட்சியை எதிர் கொண்ட பல பிரதேசங்களில் நேற்றிரவு முதல் பலத்த மழை பெய்யத் தொடங்கியுள்ளது. குறித்த பிரதேசங்களில் வாழும் மக்கள் சந்தோசமாக ஆரவாரத்துடன் மழையை வரவேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றிரவு மாத்தளை மாவட்டத்திலுள்ள பல பிரதேசங்களில் மழை பெய்ய ஆரம்பித்தது. அத்துடன் இன்று காலை 6 மணியளவில் குறித்த பிரதேசங்களில் பலத்த மழை பெய்துள்ளது.
அனுராதபுரம் மாவட்டமும் சுமார் 8 மாதங்களாக மழையின்றிக் காணப்பட்டது. அங்குள்ள குளங்களில் நீர்மட்டம் குறைந்திருந்ததுடன் சில குளங்கள் முற்றாக வற்றி வரண்டு காணப்பட்டன. எனினும் நேற்றும் முதல் அனுராதபுரம் மாவட்டம் முழுதும் கடும் மழை பெய்துள்ளது.
இது தவிர வரட்சியால் பாதிக்கப்பட்டிருந்த பொலொன்னறுவை மற்றும் திருகோணமலைப் பகுதிகளிலும் நேற்று முதல் மழை பெய்ய ஆரம்பித்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.