டிசம்பரில் சுனாமியை விட பாரிய அழிவை ஏற்படுத்தும் எல்னினோ சூறாவளி
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_272.html
கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமியை விடவும் பல மடங்கு அழிவுகளை ஏற்படுத்தும் “எல்னினோ” எனும் சூறாவளி 2014 ஆம் ஆண்டு டிசம்பரில் வீசவுள்ளதாக சர்வதேச காலநிலை அமைப்பு எதிர்வு கூறியுள்ளது.
இது ஆசியா, அவுஸ்திரேலியா மற்றும் தென் அமெரிக்கா போன்ற பிராந்தியங்களுக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் என அவ்வமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்காசியாவின் இலங்கை, இந்தியா, இந்தோனேஷியா உட்பட ஏனைய பல பிராந்தியங்களில் இந்த எல்னினோ சூறாவளியினால் நீண்ட கால வரட்சி நிலைமை ஏற்படவுள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இப்பிராந்தியங்களில் இருக்கும் சாதாரண வெப்பநிலையை விட 5 செல்சியஸ் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்த சூறாவளியினால் தென் அமெரிக்காவில் பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் இந்த கால நிலை தொடர்ந்து அடுத்த வருடம் ஆகஸ்ட் வரை நிலைக்கக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும் அவ்வமைப்பு அறிவித்துள்ளது.
இதேவேளை, இவ்வாறான காலநிலை இலங்கை அரசியலில் பாரிய செல்வாக்குச் செலுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியினால் நாடு எதிர்கொண்ட அழிவு, அடுத்து 2005 ஆம் ஆண்டு வந்த ஜனாதிபதித் தேர்தலில் தாக்கம் செலுத்தியதாகவும், ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவுக்கு எதிராக மக்களின் பாரிய எதிர்ப்பு உருவாக இது காரணமாக அமைந்திருந்ததாகவும் அரசியல் ஆய்வாளர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாக சிங்கள தேசிய ஊடகமொன்று அறிவித்துள்ளது.