பொல்லால் அடிக்கப்பட்டு தந்தை மற்றும் மகன் கொலை
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_487.html
மீகஹதன்ன பிரதேசத்தில் திடீரென வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்று அங்கிருந்த தந்தை மற்றும் இரண்டு மகன்மாரை இரும்புப் பொல்லுகளால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த மூவரும் மீகஹதென்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தந்தையும் ஒரு மகனும் மரணமடைந்துள்ளனர்.
நேற்றிரவு 10.45 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
மரணமானவர்கள் 72 மற்றும் 42 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டதால் மரணம் நேந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவத்துடன் 5 பேர் தொடர்புபட்டுள்ளனர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.