நிர்வாண புகைப்படத்துக்கு ஆசிரியையின் முகத்தை சேர்த்து Facebook இல் தரவேற்றிய மாணவன் - நுகேகொடையில் சம்பவம்
http://newsweligama.blogspot.com/2014/08/facebook.html
நுகேகொடையிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவரின் முகத்தை நிர்வாணமான பெண்ணொருவரின் புகைப்படத்துடன் இணைத்து முக நூலில் தரவேற்றம் செய்த மாணவன் ஒருவனை நுகேகொட நீதவான் இன்று பிணையில் விடுதலை செய்தார்.
14 வயதான இந்தச் சிறுவனால் குறித்த ஆசிரியையின் முகத்தை நிர்வாணமான பெண்ணொருவரின் உடலுடன் இணைத்து முக நூலில் தரவேற்றி இருப்பதாக இன்னொரு ஆசிரியை குறித்த ஆசிரியைக்கு அறிவிக்கவே அவர் இது பற்றி குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு இது பற்றி முறைப்பாடு செய்துள்ளார்.
புகைப்படத்தை தரவேற்றம் செய்த நபரை அடையாளம் காண குறித்த ஆசிரியை போலியான முக நூல் கணக்கொன்றின் மூலம் குறித்த சந்தேக நபருடன் தொடர்பு கொண்டுள்ளதோடு அதன் போது சந்தேக நபர் ஆசிரியையின் தொலைபேசி இலக்கத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஆனால் குறித்த ஆசிரியையோ அவரது உறவைனர் ஒருவரின் தொலைபேசி இலக்கத்தையே சந்தேக நபருக்குக் கொடுத்துள்ளார். பின்னர் சந்தேக நபர் குறித்த இலக்கத்துடன் தொடர்பு கொண்ட போது சந்தேக நபரின் இலக்கத்தின் மூலம் இது பற்றித் தேடிப் பார்த்த போது சந்தேக நபர் அதே பாடசாலையில் கற்கும் 14 வயது மாணவன் என தெரியவந்துள்ளது.