அளுத்கம நிர்மாணப் பணிகளில் விமானப் படை வீரர்களும் இணைவு
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_496.html
அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற இன வன்முறைச் சம்பவத்தினால் சேதமடைந்த 35 வியாபார நிலையங்களை புனர்நிர்மாணம் செய்யும் பணியில் இராணுவத்தினருடன் இலங்கை விமானப் படையினரும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் கோலித குணதிலகவின் ஆலோசனையின் பேரில் 110 விமானப் படை வீரர்கள் அப்பிரதேசத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இது தொடர்பில் கண்டறிவதற்கு விமானப் படைத்தளபதி இன்று அப்பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, அப்பிரதேச வாசிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதுடன், அளுத்கம பெல்லன விகாரை மற்றும் தர்மபால பிரிவெனா நிர்மாணப் பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டதாகவும் சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.