குராம் ஷெய்க்கின் கொலையாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை போதுமானதல்ல - சட்ட மா அதிபர்
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_94.html
பிரித்தானியப் பிரஜையான குராம் ஷெய்க்கின் கொலையாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை போதுமானதல்ல எனக்கூறி சட்ட மா அதிபர் அவர்கள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்துள்ளார்.
குறித்த வழக்கில் தங்காலை பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட நால்வர் குற்றவாளிகளாக இனம் காணப்பட்டனர்.
சுமார் இரண்டரை வருடங்கள் நீடித்த குராம் ஷெய்க் கொலை வழக்கில் தங்காலை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சம்பத் விதானபதிரன உள்ளிட்ட நால்வருக்கு சென்ற மாதம் 18ம் திகதி 20 வருடக் கடூழியச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.