பிக்கு மாணவன் உட்பட இரு சிறுவர்கள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_509.html
கடுகண்ணாவைப் பொலிஸ் பிரிவிலுள்ள திஸ்மட பிரதேசத்திலுள்ள விகாரையின் பிக்கு மாணவன் ஒருவனும் மற்றுமொரு சிறுவனும் கடத்தப்பட்டு கை,கால் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
தேயிலைத் தோட்டமொன்னிறிலிருந்து இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட பிக்கு மாணவன் 13 வயதுடையவரெனவும் விகாரையில் இருந்த மற்றைய சிறுவன் 14 வயதுடையவரெனவும் தெரிவிக்கப்படுகிறது.
விகாரையில் எவ்வித பொருட்களும் களவாடப்படாத நிலையில் இவர்கள் ஏன் கடத்தப்பட்டார்கள் என்பது தெரியவில்லை.
இச் சம்பவம் தொடாபாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். - virakesari