தந்தையை பொல்லால் தாக்கி கொலை செய்த மகன் கைது
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_81.html
ரத்கம - ஓவகந்த பிரதேசத்தில் தனது தந்தையை பொல்லால் தாக்கி கொலை செய்த மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில் 56 வயதுடைய நபரே உயிரிழந்தவராவார்.
குடும்ப பிரச்சினை காரணமாகவே இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.