ஹம்பாந்தோட்டை மாநகர சபையை நகர சபையாக மாற்றுமாறு நகர மேயர் கோரிக்கை
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_52.html
ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் ஊடாக எதிர்பார்க்கப்படுகின்ற மக்களுக்கான சேவைகளை நிறைவேற்ற முடியாத நிலை தோன்றியுள்ளதால் அதனை மீண்டும் நகர சபையாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு நகர மேயர் ஹெராஜ் ரவிந்திர பெணர்ண்டோ தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற மாநகர சபை அமர்வில் உரையாற்றியப் போதே நகர மேயர் இந்த கருத்தை கூறியுள்ளார்.
சபையினால் மக்களுக்கான சேவைகளை உரியவாறு முன்னெடுத்துச் செல்வதற்காக இணக்கம் காணப்பட்டுள்ளவாறு வசதிகள் செய்துகொடுக்கப்படுவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹம்பாந்தோட்டை புதிய நகரிலிருந்து வரி வருமானம் கிடைக்காமை, அபிவிருத்தித் திட்டங்களுக்காக மாநகர சபைக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டுள்ள ஒதுக்கீடுகள் கிடைக்காமை ஆகிய விடயங்களை மாநகர மேயர் சபையில் மேலும் எடுக்கூறியுள்ளார். - NewsFirst