ஜனாதிபதிக்கு மூன்றாவது முறையாகவும் தேர்தலில் போட்டியிடமுடியும்!
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_549.html
இலங்கை அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியும் என்பது அரசின் நிலைப்பாடாகும் என அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (14) தகவல் ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்றது.
அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி எமது ஜனாதிபதிக்கு மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாதொன முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா கூறிவருகிறார். இது தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோதே அமைச்சர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில்;
இது ஒரு ஜனநாயக நாடு. எவருக்கும் தமது கருத்துக்களை வெளியிடும் உரிமை இருக்கின்றது. எனினும் எமது ஜனாதிபதி மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவார் என்பது உறுதியானது.
தேர்தல்களில் போட்டியிட்டு மிக அதிகமாக தடவைகள் தோல்வியுற்ற அனுபவம் எதிர்கட்சித் தலைவருக்கு நிறையவே உண்டு என்பது அனைவரும் அறிந்த விடயமே என்றும் அமைச்சர் கூறினார்.