ஹஸன் மெளலவியின் இடத்திற்கு லாஹிர் நியமனம்
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_77.html
கிழக்கு மாகாண சபையின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம்.ஹஸன் மௌலவி காலமானதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு சட்டத்தரணி ஜே.எம்.லாஹீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் எதிர்வரும் 19ஆம் திகதி பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்ட இவர், அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம்.ஹஸனுக்கு அடுத்தப்படியாக கூடுதலான வாக்குகளை பெற்றிருந்தார்.
இவர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.முகம்மட் மன்சூரின் இணைப்புச் செயலாளராக கடமையாற்றியதுடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.