உப்புலின் பாதுகாப்பை உடனடியாக உறுதிசெய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_55.html
இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் உப்புல் ஜெயசூரியவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உடனடியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்தார்.
அத்துடன் சட்டம் ஒழுங்குத்துறை அமைச்சின் செயலாளர் நந்தா மல்லவராச்சியை எதிர்வரும் 8ம் திகதி மன்றில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் எதிர் நடவடிக்கைகளை கண்டித்து உப்புல் ஜெயசூரிய கருத்துக் கூறியமையை அடுத்து அவர் வாகனத்தில் பயணம் செய்யும் போது அடையாளம் தெரியாதோர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்வதாக முறையிடப்பட்டது.
எனினும் பொலிஸார் இந்த விடயத்தில் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதனையடுத்தே சட்டத்தரணிகள் சங்க தலைவர் நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்தார்.