ஹேமாலின் வாகனத்துக்கு தண்டப் பணம் அறவிட்ட பொலிஸ்காரருக்கு எதிராக வழக்கு
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_56.html
பிரதி அமைச்சர் ஹேமல் குணசேகரவின் வாகனம் தெற்கு அதிவேக பாதையில் வேகமாக சென்றமைக்காக தண்டப்பணம் அறவிட்ட பொலிஸார் ஒருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் லஞ்சக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவின் பணியாளரால் இந்தக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
கடந்த மாதத்தில் பிரதியமைச்சரின் வாகனம் தென் அதிவேக பாதையில் கட்டுப்பாட்டு வேகத்துக்கு அதிகமாக சென்றமையால் பொலிஸ்காரரான சுமிந்த சமன் என்பவர் தண்டப் பணத்தை விதித்தார்.
இதனையடுத்து அவருக்கு எதிராக பிரதியமைச்சர் அச்சுறுத்தல்களையும் விடுத்து வந்தார்.
இந்தநிலையிலேயே குறித்த பொலிஸ்காரர் 2009 ஆம் ஆண்டு ஒருவரிடம் 1000 ரூபா லஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வழக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.