பலஸ்தீனத்திற்கு இலங்கை நிதி உதவி
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_7.html
பலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையிலான மோதல்கள் நிறுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பலஸ்தீனத்திற்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
பலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் வன்முறைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த மோதல்களில் படையினரும் இரு நாடுகளினதும் சிவிலியன்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
அதிகளவில் பலஸ்தீன சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பலஸ்தீன - இலங்கை நட்புறவு அமைப்பின் ஸ்தாபகரான ஜனாதிபதி பலஸ்தீனத்திற்கு நிதி உதவியை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதி பலஸ்தீனத்திற்கு விஜயம் செய்திருந்த போது அவருக்கு விருது வழங்கப்பட்டதுடன் அந்நாட்டின் ஒர் வீதிக்கு ஜனாதிபதியின் பெயரும் சூட்டப்பட்டிருந்தமை குறிப்படத்தக்கது.