கொழும்பில் பிச்சை எடுக்கும் வெளிநாட்டுக் குடும்பம் - படம்
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_574.html
இலங்கையின் பொருளாதார சூழலில் வாழ்ந்து வரும் நம் மத்தியில் வாழும் பொருளாதார சூழ்நிலையை எதிர்கொள்ள முடியாத சிலர் சமூகத்தில் பிச்சை எடுத்து வாழ்வதை காணமுடியும்.
இவர்களில் 100 வீதமானவர்கள் இலங்கையர்களாவே இருப்பார்கள்.
எனினும் வெளிநாடு ஒன்றை சேர்ந்த குடும்பம் ஒன்று இலங்கை பிச்சை எடுத்து வாழ்வதை கொழும்பு நகரில் காணமுடிந்தது.
கொழும்பு பம்பலப்பிட்டி ரெயில் நிலையத்திற்கு அருகில் இந்த வெளிநாட்டு குடும்பம் வாழ்ந்து வருகிறது.
இந்த குடும்பத்தில் ஆண், பெண், மூன்று சிறுவயது பெண் பிள்ளைகள் இருக்கின்றனர்.
இலங்கைக்குள் இந்த விதமாக வெளிநாட்டு குடும்பம் பிச்சைக்கார்களாக மாறியதற்கு பின்னால் மிக நீண்ட சம்பவம் ஒன்று இருக்கக் கூடும்.
எது எப்படி இருந்தாலும் உலக பொருளாதார வீழ்ச்சியின் மற்றுமொரு விதமான பாதிப்பாகவும் இது இருக்கலாம்.