பாணந்துறையில் பொது பல சேனா - விசேட அதிரடிப்படையினர் குவிப்பு
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_783.html
அதிஷ்டான பூஜை” என்ற பெயரில் பொதுபல சேனா அமைப்பின் நிகழ்வொன்று பாணந்துறை கெசல்வத்தை திக்கல வீதியில் அமைந்துள்ள பூர்வராம விகாரையில் தற்பொழுது நடைபெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மாலை 6:30 மணியளவில் ஆரம்பமாக திட்டமிடப்பட்டிருந்த இந்த பூஜை வழிபாடு 6 மணியளவிலேயே ஆரமாகியுள்ளது. விகாரையின் உட் பகுதியில் இந்த நிகழ்வுகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. அதேவேளை குறித்த பூஜை வழிபாடுக்கு சுமார் ஆறாயிரம் பக்தர்களை எதிர்பார்ப்பதாகவும், விஷேட அதிதியாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.
இந்த பூஜை வழிபாடு காரணமாக இன்று மாலை முதல் பாணந்துறை பிரதேம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தீ அணைக்கும் வாகனங்களுடன் விஷேட அதிரடிப்படை குவிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அதேவேளை பாணந்துறையில் உள்ள முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான் பெய்ன்ட் நிறுவனம் ஒன்றிற்கு விஷேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.