என்னை நானே தாக்கிக் கொண்டேன் - சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன்

http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_640.html

குறித்த மாணவன் தன்னைத் தானே தாக்கிக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறினார்.
"சில நாட்களுக்கு முன்னர் சப்ரகமுவ பல்கலைகழகத்தின் மாணவன் ஒருவன் தன் மீது தாக்குதல் மேற்கொண்டதாக குறித்த மாணவன் பலாங்கொடை பொலிஸில் முறையிட்டிருந்தார். இந்த முறைப்பாட்டை விசாரிக்கும் போது குறித்த மாணவன் தெரிவித்த கருத்துக்களிலும் அவரது முறைப்பாட்டிலும் வித்தியாசம் காணப்பட்டது.
மேலும் விசாரித்ததில் குறித்த மாணவன் கைது செய்யப்பட்டு பயங்கரவாத செயல்கள் விசாரணைப் பிரிவுக்கு கொண்டுவரப்பட்டார்.
அங்கு அவர்க் தன் மீது தானே தாக்குதல் நடத்தியதை ஒப்புக்கொண்டார்." என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.