இளமையை தக்கவைப்பதற்காக ஊசி மருந்து ஏற்றிய மருத்துவர் மரணம்
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_778.html
கொழும்பு பம்பலபிட்டி விசாகா வீதியில் இயங்கி வரும் அழகுசாதன நிலையத்தில் ஊசி ஏற்றிக்கொண்ட மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவில் பயிற்சி பெற்ற ஒருவரினால் நடத்தப்பட்டு வந்த இந்த அழகுசாதன நிலையத்தில் தமது இளமையை தக்கவைத்துக் கொள்வதற்காக மருத்துவம் செய்து கொள்ள சென்ற 47 வயதுடைய பெண் மருத்துவர் ஒருவருக்கு ஊசி ஏற்றப்பட்டுள்ளது.
இதன்போது குறித்து ஊசி மருத்து காரணமாக குறித்த மருத்துவர் மரணமானதாக பம்பலபிட்டி பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.