ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்தை எதிர்க்க தன்னைத் தானே நலிவடையச் செய்யும் பொது பாலா சேனா..??
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_646.html
சில வாரங்கள் முன்பு ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்தானது பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் ஆடி வரும் கோரத் தாண்டவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய முற்பட்ட போது,ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்தானது இஸ்ரேலை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தால்,நாங்கள் இஸ்ரேலிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்வோம் என பொது பல சேனா அமைப்பு எச்சரித்திருந்தது.
நாட்டில் நடக்கும்,நடக்காத விடயங்களை உடனுக்குடன் அறிந்து அழைப்பு விடுக்காமலேயே பங்கு கொள்ளும் பொது பல சேனா,ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்தானது ஆர்ப்பாட்டம் செய்வதற்கு சில நாட்கள் முன்பு “பிரன்ஸ் ஒப் பலஸ்தீன்” அமைப்பின் ஏற்பாட்டில் அசாத் சாலி தலைமையில்,அமைச்சர் ஹக்கீமின் பங்கேட்புடனும் கொழும்பு தெவட்டஹக ஜும்மா பள்ளிவாயல் முன்பு முஸ்லிம்களை அநியாயமாக பலஸ்தீனில் கொன்று குவிக்கும் இஸ்ரேலை கண்டித்து பாரிய ஆர்ப்பாட்டம் நடாத்திய போது தனது மூக்கை கிஞ்சித்தும் நுழைக்காத பல சேன, ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம் நடாத்த முயற்சித்த போது தடுக்க முற்பட்டதானது இஸ்ரேலை ஆதரிக்க அல்ல ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்தை எதிர்க்க என்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.
எனினும்,தாங்கள் இஸ்ரேல் மீது கொண்ட பற்றினாலேயே இஸ்ரேலை ஆதரிப்பதாக,திடீர் பற்றிற்கு சில நொண்டிக் காரணங்களையும் முன் வைத்ததால் இவர்கள் இஸ்ரேலிய ஆதரவாளர்களாகவே பார்க்கப்படுவர்.
இனி இஸ்ரேலிற்கு விழும் ஒவ்வொரு அடியும் பொது பல சேனா மீதான அடியாகவே பார்க்கப்படும்.
பிரச்சனை எழலாம் என்ற அச்சத்தில் தௌஹீத் ஜமாத்,பொது பல சேன ஆகிய இரு அமைப்புக்களுக்கும் ஆர்பாட்டம் நடாத்த நீதி மன்றத்தினால் தடை விதிக்கப்பட்ட போதும் நீதி மன்ற தடையையும் மீறி தௌஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திக்காட்டியது.
ஆர்ப்பாட்டம் நடாத்த இயலாதா நிலைக்குத் தள்ளப்பட்ட பொது பல சேன,தௌஹீத் ஜமாத்தின் ஆர்ப்பாட்டத்தை தடுக்க முற்பட்ட போது பொலிசாரால் தடுக்கப்பட்டு நடாத்தவும் இயலாது,தடுக்கவும் இயலாத நிலையில் மூக்குடைந்து வெளியேறியது.
மரத்தால் விழுந்தவனை மாடு மிதிப்பது போன்று,தௌஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம் நடாத்திய மறு நாளே இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ 1 மில்லியன் அமெரிக்க டொலரை பலஸ்தீனத்திற்கு நிதியுதவியளிக்கப்போவது ஊடக அறிக்கை விடுத்து உடைபட்ட பொது பல சேனா மூக்கை மேலும் மேலும் நொறுக்கி காட்டினார்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ 1 மில்லியன் அமெரிக்க டொலரை பலஸ்தீனத்திற்கு வழங்கினாலும் சரி,வழங்கா விட்டாலும் சரி அவரின் ஊடக அறிக்கை பொது பல சேனா இற்கு சரியான அடியே!
இதனைத் தொடர்ந்து தாங்கள் அலறி மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாகவும் பொது பல சேனா அறிவித்த போது,இது வரை எதுவும் செய்ததாக அறிய முடியவில்லை.
அண்மையில் கொழும்பு மா நகரில் ஆளும் கட்சி தொழிற் சங்கங்களின் ஏற்பாட்டில் சிரேஸ்ட அமைச்சர் அதாவுட செனவிரத்ன,அமைச்சர் பௌசி,மாகாண சபை உறுப்பினர் நௌபர் பௌசி,ஜனாதிபதின் இணைப்பாளர் ஹேம சிறி பெர்னாண்டோ ஆகியோர் பங்கேற்புடன் மத,இன பேதம் இன்றி இஸ்ரேலிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.
பொது பல சேனாவால் யாது செய்ய முடிந்தது?
முஸ்லிம் கிராமங்கள் பல இஸ்ரேலிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தன.BBS இனால் ஒரு கிராமத்தையேனும் கூட்டி ஆர்ப்பாட்டம் செய்ய முடிந்ததா?
ஒரு கூட்டத்தையேனும் கூட்டி ஆர்ப்பாட்டம் செய்ய இயலாத BBS எங்கே கிராமத்தை கூட்டப்போகிறது?
ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்தை எதிப்பதாக நினைத்து தனது இயலாமைகளை வெளிப்படுத்தி தன்னைத் தானே நலிவடையச் செய்கிறது பொது பாலா சேனா.