பொதுபல சேனாவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் தடை நீக்கப்பட்டு மீண்டும் பாவனையில்?
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_664.html
இலங்கை பெளத்த அமைப்பு பொதுபல சேனாவின் உத்தியோக பூர்வ பேஸ்புக் பக்கம் கடந்த ஜூன் மாதம் பேஸ்புக் இணையத்தில் இருந்து அகற்றப்பட்டது அறிந்ததே.
ஆனால் குறிப்பிட்ட பேஸ்புக் பக்கம் தற்போது தடை நீக்கப்ட்டு பார்வையிடக் கூடியதாக மறுபடியும் பேஸ்புக் இணையத்தில் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பிட்ட பேஸ்புக் பக்கம் பொதுபல சேனா அமைப்பினரால் கையாளப்பட்டு வந்ததுடன், அந்த பக்கத்தில் வெறுப்பை தூண்டக்கூடிய பேச்சுக்கள், படங்கள் காணப்படுவதாக பலரால் முறைப்பாடு செய்யப்பட்டு பேஸ்புக் இணையத்தில் இருந்து அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது