அஷ்ரப் வைத்தியசாலையில் தாதியர்களின் கேவலமான தூஷன வார்த்தைகளால் மனம் நொந்துள்ள தாய்மார்
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_679.html
கல்முனை அஷரப் ஞாபகத்த மடுவத்தை வைத்தியசாலைக்கு பிரசவத்துக்காக செல்லும் தாய்மார்களிடம் பிரசவத்தருவாயில் அங்கு பணிபுரியும் பெண் தாதியர்கள் கேவலமான முறையிலும் அசுத்தமான (பதிவேற்ற முடியாத) படு தூசன வார்த்தைகளில் திட்டுவதாகவும் பிரசவ தாய்மார்கள் மனம் நொந்து வேதனையுடன் தெரிவிக்கின்றார்கள்.
அந்தவகையில் அங்கு பிரசவ வழியில் துடித்துக்கொண்டிருந்த தாய் ஒருத்தரிடம் அங்குள்ள தாதிப் பெண்நொருத்தர் கேட்டுள்ள அசிங்கமான வார்த்தை ஒன்று பதிவாகியுள்ளது அவ் வார்த்தை இவ்விடத்தில் வெளிப்படையாக பதிவிடுவதென்பது சற்று கூச்சமாக இருந்தும் அதனை வேறு பாணியில் குறிப்பிட விரும்புகின்றேன்.
அப் பெண் தாதி பிரசவ தாயிடம் கேட்டுள்ளார் உடல் உறவு கொள்ள தெரியும் குழந்தை பெற தெரியாதோ என்று வேறு அசிங்கமான முறையில் கேட்டுள்ளார்.
மனிதன் உடலையும் உயிரையும் நம்பிக்கையோடு அர்ப்பணிப்பதென்பது வைத்தியத்துறை சார்ந்தவர்களிடம் மாத்திரமே அதன் அடிப்படையில் அந்த நம்பிக்கையை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு வாத்தியார்களுக்கும் தாதியர்களுக்கு உண்டென்பதை உணரவேண்டும் இது ஒரு தொழில் என்பதோடு மட்டுமின்றி இது மக்களுக்கு செய்யும் சேவையென்பதனையும் புரிந்துகொள்ள வேண்டும் இச் சேவைக்கு நம்பிக்கை இளக்கபடுவதென்பது மன்னிக்கமுடியாத குற்றமென்பதையும் அங்குள்ள தாதியர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
தாய்ஸ்த்தானத்திலே இருக்கும் பெண் தாதியர்களே இதுபோன்ற அசிங்கமான வார்த்தைகளை உபயேகிக்கும் போது, பிரசவ தாய்மார்கள் மன வேதனையடைவதாக அவர்கள் மேலும் கூறியுள்ளார்கள்.இது போன்ற பிரசவ வேதனையை இவர்களும் ஒருநாள் அனுபவிக்க நேரிடும் அவ்வேளையில் உணர்ந்து கொள்ளட்டுமென்று பிரசவ தாய்கமார்கள் சாபத்தை முன் வெய்க்கின்றார்கள்.
இதுபோன்ற ஒழுக்கமற்ற தாதிகளை இனங்கண்டு அத்தாதிகளுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமின்றி அத்தாதி துறைசார்ந்த ஒழுக்க நெறி மட்டுமின்றி அத்தாதி துறைசார்ந்த ஒழுக்க நெறி கற்பித்தலின் பின்னரே தகுதியான தகமையுள்ள தாதிகளையே பணியமர்த்துமாறு அங்குள்ள பொறுப்பதிகாரியை தாழ்மையுடன் கேட்டுகொள்கின்றேன்.
முஹம்மட் ஜெலீல்
நிந்தவூர்