இரு லொரிகள் மோதி சைக்கிளின் மீது விழுந்ததில் வாலிபர் பலி
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_690.html
கந்தான - ரீலவுல்ல பகுதியில் லொரி ஒன்று சைக்கிளின் மீது கவிழ்ந்ததில் 17 வயது வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு - நீர்கொழும்பு வீதியில் பயணித்த இரண்டு லொரிகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இதில் ஒரு லொரி கவிழ்ந்து அங்கிருந்த சைக்கிளின் மீது விழுந்ததில் அதில் இருந்த வாலிபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது பலியாகியுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய இரு லொரி சாரதிகளும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை வாரியபொல - லக்மல் உயன பகுதியில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 18 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் வேன் சாரதி படுகாயமடைந்த நிலையில் வாரியபொல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- அத தெரண