தெளஹீத் ஜமாத்தின் ஆர்ப்பாட்டத்தில் பொது பல சேனா - (படங்கள், வீடியோ)
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_724.html
நீதிமன்ற தீர்ப்பினை அடுத்து ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாதின் ஏற்பாட்டிலான இஸ்ரேலிய எதிர்ப்பு ஆர்ப்பாட்ட மாளிகாவத்தையிலுள்ள ஜமாதின் தலைமையகத்திற்கு முன்பாக நண்பகல் ஒரு மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம்
இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகி சில நிமிடங்களில் பொதுபலசேனாவின் தேரர்கள் வருகை தந்தனர். எனினும் அவர்களை உள்ளே அனுமதிக்காமல் பொலிஸார் திருப்பி அனுப்பினர்.
இந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்டம் மாளிகாவத்தை அல்பா சந்தியினை அடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக பொதுபலசேனாவின் தேரர்கள் மீண்டும் அவ்விடத்திற்கு இரு வாகனங்களில் வந்தனர்.
இதன்போது ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாதின் ஏற்பாட்டிலான இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை உடனடியாக நிறுத்த வேண்டும் என பொதுபலசேனாவின் தேரர்கள் தெரிவித்தனர்.
இதனால் தேரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. அத்துடன் ஆர்ப்பாட்ட இடத்திற்குள் பொலிஸார் குறித்த தேரர்களை அனுமதிக்கவில்லை.
இதனால் தேரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் அவர்களை மாளிகாவத்தை அல்பா சந்தியில் வைத்து அவர்களை பொலிஸார் திருப்பி அனுப்பினர்.
நன்றி: விடியல்
பட உதவி: நெத்