கிரிக்கெட் மட்டை ஒன்றுக்காக இளம் பிக்குகள் இருவருக்கு இடையில் மோதல்- ஒருவருக்கு கத்திகுத்து
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_726.html
கிரிக்கெட் மட்டை ஒன்றுக்காக இளம் பௌத்த பிக்குகள் இருவருக்கு இடையில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது. பௌத்த விஹாரை ஒன்றில் தங்கி படித்து வரும் இரண்டு இளம் பௌத்த பிக்குகளுக்கு இடையில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குளியாப்பிட்டி பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஒரு பௌத்த பிக்கு மற்றைய பிக்குவை கத்தியால் குத்தியுள்ளார். பதிலுக்கு அவர் பொல் ஒன்றினால் தாக்கியுள்ளார். கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது மட்டை ஒன்றை பயன்படுத்துவது தொடர்பில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் கைது செய்த பொலிஸார், வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்