ஹமாஸ் ஆயுததாரிகள் மீதான தாக்குதல்கள் தொடரும்- இஸ்ரேல்
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_348.html
ஹமாஸ் ஆயுததாரிகள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்ஜாமின் நெட்டன்யாஹு தெரிவித்துள்ளார்.
இரு தரப்பிற்கும் இடையில் மீண்டும் மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அவரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
காஸாவில் இருந்து 137 ரொக்கட்டுக்கள் தமது பகுதிக்குள் வீசப்பட்டுள்ளதாகவும் அதற்கு பதில் அளிக்கும் வகையில் 92 தடவைகள் வான் தாக்குதல்களை நடத்தியதாகவும் இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது.
எகிப்தின் கைய்ரோ நகரில் முன்னெடுக்கப்பட்ட யுத்த நிறுத்தத்தை நீடிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை குழப்பியதாக இருதரப்பும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கடந்த மாதம் 8 ஆம் திகதி தொடக்கம் ஆறு வாரங்களாக இடம்பெற்ற மோதல்களில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பலியாகியிருந்தமை குறிப்பிடதக்கதாகும்