நாம் திட்டமிட்டு பொதுபல சேனாவைச் சந்திக்க வில்லை – ஹஜ் முகவர் அமைப்பு மறுப்பு
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_791.html
நாங்கள் திட்டமிட்டு பொதுபல சேனாவைச் சந்தித்து எம்முடைய ஹஜ் பிரச்சினையை முறையிடவில்லை. எதேட்சையாக சந்தித்தபோதே கதைத்தோம் என ஹஜ் முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.
நேற்று ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து அவ்வமைப்பின் கருத்தை தெரிவித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
நேற்றுக் காலை நாங்கள் ராஜகிரிய பள்ளிவசால் அருகில் எமது வாகனத்தை நிறுத்திவிட்டு எமது சக நண்பா்களுடன் நிற்கும்போது, தற்செயலாகவே பொதுபலசேனாவின் பணிப்பாளர் டிலந்த விதானகேயைச் சந்தித்தோம். அவரே உங்களது ஹஜ் விடயமாக நீங்கள் பேசியதை தொலைக்கட்சி ஊடக கண்டேன் என வினவினார். இதன்போதே நாம் அவரிடம் இது தொடர்பில் குறிப்பிட்டோம்.
இந்த செய்தி முழுநாடும் அறிந்த ஒரு விடயம். என்ன நடந்தது என்பது குறித்து ஊடகங்களில் தௌிவாக வெளியிடப்பட்டிருந்தன. நாங்கள் ஒருபோதும் பொதுபல சேனாவிடம் சென்று வேண்டுமென்டு சொல்லவில்லை.
இந்தப் பிரச்சினையை நீங்கள் ஏன் உலமா சபையிடமோ ,முஸ்லீம் அரசியல் தலைவர்களிடமோ தெரியப்படுத்தவில்லை என்று கேட்டார். அதற்கு நாம் இது குறித்து பல தடைவ சொல்லியும் எவ்வித பலனும் கிடைக்க வில்லை என்று அவரிடம் தெரிவித்தோம்.
இவ்விடயம் உங்களது உள்விடயம். இதில் நாங்கள் தலையிடமாட்டோம் எனக் கூறிவிட்டு, ஹஜ் விடயம் பற்றி நடைபெறும் நிலவரங்களை அவர் எம்மிடம் விரிவாக கேட்டறிந்து கொண்டார். இதனையே அவரும் சில இணையத்தளங்களுக்கு சொல்லியிருக்கின்றார். இதுவே உண்மை எனவும் ஹஜ் முகவர் நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது