இஸ்ரேலின் ஆவேசம் - அல் கஸ்ஸாம் தளபதி அபூ காலித் குடும்பத்துடன் வீர மரணம்..?
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_794.html
அல்கஸ்ஸாம் படையின் பொதுத் தளபதி அபூ காலித் முஹம்மத் அல்லைப் அவர்களின் மனைவியும் மகளும் இன்றைய இஸ்ரேலிய தாக்குதலில் வீர மரணம் அடைந்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தழு எனும் குடும்பத்தவர்களின் வீட்டின் மீது அவசர அவசரமாக இஸ்ரேலிய F-16 விமானங்கள் வீசிய குண்டு வீச்சில் பலி ஆயினர் .
எந்தவித அடிப்படைகளும் இன்றி காஸாவில் இருந்து ராக்கெட் தாக்குதல் நடந்ததாக பொய் கூறி போரை மீண்டும் ஆரம்பித்ததற்கு காரணம் இஸ்ரேல். தான் பெற்ற இரகசிய உளவுத் தகவலின் படி அல்கஸ்ஸாம் தளபதி முஹம்மத் அல்லைப் தாக்கப்பட்ட வீட்டில் இருப்பதாக எண்ணி அவரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது.