நவாஸ் ஷெரீபுக்கு எதிராக கலவரம் வெடிக்கும் அபாயம்!
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_972.html
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு எதிரான போராட்டத்தில் இஸ்லாமாபாத்தில் இன்று (20) கலவரம் வெடிக்கும் அபாயம் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரீப் விலக வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும்,தாரீக்,இ,இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் மற்றும் மதத் தலைவரும் பாகிஸ்தான் ஆவாமி தாரிக் அமைப்பின் தலைவருமான தாகிருல் காத்ரி ஆகியோர் கோரி வருகின்றனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி, தலைநகர் இஸ்லாமாபாத்தில்தொடர்ந்து இருநாட்களாக இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் பேரணி நடத்தினர். இஸ்லாமாபாத்துக்குள் நுழைந்த அவர்கள், நகருக்கு வெளியே முகாமிட்டுள்ளனர். இதனிடையில் கடந்த திங்கட்கிழமை மாலைக்குள் பதவி விலக வேண்டும் என்று இருவரும் நவாஸ் ஷெரீபுக்கு கெடு விதித்திருந்தனர்.
அவ்வாறு விலகாவிட்டால், நாடாளுமன்றம், முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ள பாதுகாப்பு மிகுந்த பகுதிக்குள் நுழைந்து முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.அதன்படி,ஆர்ப்பட்டக்காரர்கள் இன்று முற்றுகைப் போராட்டத்துக்கு தயாராகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால், பதற்றம் நிலவுகிறது. இஸ்லாமாபாத் நகரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. போலீசாருடன் ராணுவத்தினரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இம்ரான் கட்சியினருக்கும் நவாஸ் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை தவிர்ப்பதற்கு இல்லை என்று அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்