புறக்கோட்டையில் புதிய போக்குவரத்துத் திட்டம்
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_90.html
கொழும்பு ரெக்லமேஷன் வீதி, சைனா வீதி மற்றும் பிரதான வீதி ஆகியவற்றில் இன்றுமுதல் ஒரு வழிப் போக்குவரத்தை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதேசத்தில் காணப்படும் வாகன நெரிசலை குறைக்கும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
புறக்கோட்டை நோக்கிப் பயணிக்கும் வாகனங்கள் ரெக்லமேஷன் வீதியூடாக கொச்சிக்கடைக்கு ஒருவழிப் பாதையில் பயணிக்க முடியுமென அவர் கூறினார்.
கொச்சிக்கடை, முகத்துவாரம் மற்றும் கொட்டாஞ்சேனையில் இருந்து பயணிக்கும் வாகனங்கள் சைனா வீதி, பிரதான வீதி ஊடாக பயணிக்கலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். - NewsFirst