ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியென கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_95.html
இந்த நாட்டில் அரசாங்கத்தினை தீர்மானிப்பது பெரும்பான்மை சிங்கள மக்களே. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியென கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவிக்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு முஸ்லிம்களே காரணம். இதற்கு அரசாங்கம் ஒருபோதும் பொறுப்பேற்காது எனவும் குறிப்பிட்டார்.
அளுத்கம தாக்குதல் சம்பவம் அரசாங்கத்தினால் திட்டமிட்டு நடாத்தப்பட்டதொன்று. அரசாங்கம் தவறை ஏற்றுக்கொள்ள வேண்டும் என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பில் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக ரணவக்கவிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த நாட்டின் சிங்கள மக்களே எப்போதும் ஆட்சியை தீர்மானித்து வருகின்றனர்.

அரசாங்கம் என்பதையும் ஜனாதிபதி யார் என்பதையும் தீர்மானிக்கும் சக்தியாக எப்போதுமே சிங்கள மக்களே உள்ளனர். இந்நிலையில் முஸ்லிம்களோ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோ ஆட்சியை தீர்மானிக்கின்றனர் எனக்கூறுவது வேடிக்கையாக உள்ளது.
நிரந்தரமற்ற கொள்கை
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது தனிப்பட்ட தேவைகளுக்காகவும் சுயநலத்திற்காகவும் அரசியல் செய்கின்றமை அனைவருக்கும் தெரிந்த விடயம். இன்று முஸ்லிம்கள் இதை உணரா விட்டால் எதிர்காலத்திலும் முஸ்லிம் சமூகம் தவறானதொரு கொள்கையிலேயே வழிநடத்தப்படுவார்கள். ஆட்சி மாற்றத்திற்கு ஏற்ப அரசாங்கத்தில் ஆசனங்களை கைப்பற்றுவது மட்டுமே இவர்களின் ஒரு கொள்கையாக உள்ளது. இது இந்த அரசாங்கத்தை மட்டுமல்ல எந்தவொரு அரசாங்கத்தினையும் பாதிக்காது.
வடக்கில் எவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிவினையினை தூண்டி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனரோ அதேபோல் கிழக்கு முஸ்லிம்களை ஏமாற்றி தீவிரவாதக் கொள்கைகளை முஸ்லிம் சமூகத்திடையே பரப்பும் செயலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்து வருகின்றது. அதேபோல் அரசாங்கத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்தை வீழ்த்தும் முயற்சியினையே முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொள்கின்றது. சர்வதேசத்திடம் பொய்யான அறிக்கைகளை சமர்ப்பித்து சர்வதேசத்தின் பணத்திலும் அரசாங்கத்தின் பணத்திலும் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
கதவுகள் திறந்தே உள்ளது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை எச்சரிப்பதாலோ அல்லது தமது சவால்களால் அரசாங்கத்தினை தம்வசம் இழுக்கலாம் என்றோ நினைப்பது முட்டாள் தனமான செயற்பாடு. இந்த ஆட்சியில் திருப்தி இல்லாவிடில் அரசாங்கம் செய்வது தவறெனில் முஸ்லிம் காங்கிரஸ் அரசை விட்டு வெளியேறலாம். அவர்களை யாரும் தடுத்து வைக்கவில்லை. அவர்கள் வருவதற்கு எவ்வித தடைகளும் இல்லாது கதவுகள் திறந்திருந்ததைப் போல் போவதற்கும் கதவுகள் திறந்தே இருக்கின்றது. தாராளமாக வெளியேற முடியும்.
அளுத்கம சம்பவத்திற்கு அரசு காரணமில்லை அதேபோல் அளுத்கம சம்பவம் முஸ்லிம்களினால் திட்டமிட்டு நடாத்தப்பட்டதொன்றாகும். இதில் சிங்கள மக்கள் மீதோ அரசாங்கத்தின் மீதோ பழி சுமத்த முயற்சிப்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அமைச்சர் ஹக்கீம் அளுத்கம சம்பவம் தொடர்பில் சாட்சியங்களை வைத்துள்ளாரெனின் அவற்றை நிரூபித்துக்காட்ட வேண்டும். அதை விடுத்து வார்த்தையில் கூறுவது ஒரு போதும் உண்மையாகாது.
எனினும் அளுத்கம சம்பவம் தொடர்பில் சரியான உண்மையான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளது. இவை தற்போது இணையத் தளங்களிலும் பதிவேற்றப்பட்டுள்ளது. எம்மிடம் பல ஆதாரங்கள் இருந்தும் இந்த பிரச்சினையினை தடுக்க வேண்டும் என்றே நினைக்கின்றோம். எனினும் முஸ்லிம் அமைச்சர்கள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டே செயற்படுகின்றனர். முஸ்லிம்கள் மீது தவறிருக்கையில் அரசாங்கம் தவறினை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறுவதை அரசாங்கம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது எனவும் அவர் தெரிவித்தார்.