பொலிஸார் “ஸ்பீட் ராடார் கன்” (speed radar gun) பயன்படுத்த மாட்டார்கள்
http://newsweligama.blogspot.com/2014/08/speed-radar-gun.html
வேகத்தை கண்டுபிடிக்கும் “ஸ்பீட் ராடார் கன்” என்ற கருவி இனி பயன்படுத்தப்படமாட்டாது என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
சட்டமா அதிபர் வழங்கிய பணிப்புரைக்கு ஏற்பவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே சட்டமா அதிபர் 2009ம் ஆண்டு வெளியிட்ட சுற்றுநிருபம் ஒன்றில் வீதிகளில் வேகத்தை மீறும் சாரதிகளுக்கு எதிராக குறித்த கருவி பயன்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
எனினும் தற்போது அதனை நீக்கியுள்ள அவர், உரிய சட்ட ஏற்பாடுகள் இல்லாமை காரணமாக குறித்த “ஸ்பீட் ராடார் கன்” கருவியை பயன்படுத்த முடியாது என்று குறிப்பிட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை வீதிகளில் வாகன வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக வீதி சமிக்ஞைகளை உரிய விதத்தல் பொருத்துமாறு உயர்நீதிமன்றம் 2008ம் ஆண்டு உத்தரவிட்டிருந்த போதும், அந்த உத்தரவு தமக்கு உரிய வகையில் கிடைக்கவில்லை என்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.