அக்மீமன 8 வயது சிறுமி கற்பழித்துக் கொலை - முழு விபரம் (Exclusive Full Report)
http://newsweligama.blogspot.com/2014/09/8-exclusive-full-report-video.html
காலி அக்மீமன பகுதியில் கடந்த 17ம் திகதி 8 வயது சிறுமி ஒருவர் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் சம்பந்தமாக உடனடியாக பொலிஸார் விசாரணைகளை முடுக்குவிட்டதன் பலனாக குறித்த கொலையைச் செய்த சந்தேக நபர் ரொனீ என்ற பொலிஸ் நாயின் உதவியுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.
பூஜனீ அஸன்தி என்ற சிறுமியே இவ்வாறு கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவ தினம் குறித்த சிறுமி தனது அக்காவுடன் பாடசாலை விட்டு வந்துள்ளார். அந்த நேரம் மேசன் வேலை செய்யும் அவரது தந்தையும் தேயிலைக் கொழுந்து பறிக்கும் அவரது தாயும் வேலைக்குச் சென்றிருந்தனர். அவரது அக்காவும் மாலை நேர வகுப்புக்களுக்காக செல்ல ஆயத்தமாகியபோது குறித்த சிறுமி தன்னை மாமியார் வீட்டில் விட்டு விட்டுச் செல்லும்படி அக்காவிடம் கூறியுள்ளார். எனினும் அவரது அக்கா அதனை அவ்வளவாக காதில் வாங்கிக் கொள்ளாமல் அவரை தனியே வீட்டில் விட்டுச் சென்றுள்ளார்.
பின்னர் மாலை 5.15 மணியளவில் தேயிலை கொழுந்து பறிக்கச் சென்றிருந்த சிறுமியின் தாய் வீட்டுக்கு வந்த போது அங்கே பூஜனீ இருக்கவில்லை. இதனால் எல்லா இடமும் சிறுமியைத் தேடிய அவர் சிறுமியின் தகவல்கள் எதுவும் கிடைக்காமல் போகவே 6.30 மணியளவில் அக்மீமம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
பின்னர் ஊர் மக்களும் கொலை சந்தேக நபரும் சேர்ந்து குறித்த சிறுமியைத் தேடத்தொடங்கியுள்ளனர். இதன் பலனாக சிறுமி கொலை செய்யப்பட்ட நிலையில் தேயிலைத்தோட்டம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டார். சிறுமியின் உடல் அங்கு இருப்பதை கொலையாளியே முதலில் ஊர் மக்களுக்குக் காட்டியுள்ளார். கொலையாளி சிறுமியின் வீட்டில் இருந்து சுமார் 200 மீற்றர் தூரத்திலுள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்துள்ளார்.
சந்தேக நபர் குறித்த தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து குறித்த சிறுமியைக் கடத்திச் சென்று காட்டுப்பகுதி ஒன்றில் வைத்து கற்பழித்துள்ளார். அதன் பின்னர் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். எனினும் சிறுமியின் உயிர் போகவில்லை என நினைத்து கயிறொன்றினால் கழுத்தை நெரித்துள்ளார். சிறுமி மீட்கப்படும் போது அவரது கீழாடையும் அகற்றப்பட்ட நிலையில் இருந்தது. கொலைச் சந்தேக நபர் தொழில் அதுவும் செய்யாத காமவெறி பிடித்த ஒருவர் என ஊர் மக்கள் கூறுகின்றனர்.
இதன் பின்னர் ரொனீ என்ற பொலிஸ் நாயை உபயோகித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் குறித்த நாய கொலையாளியின் வீட்டின் கட்டிலருகே போய் நின்று குரைக்கத் தொடங்கியுள்ளது. இதன் பின்னர் சந்தேக நபர் அக்மீமன பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதன் பின்னர் பொலிஸ் விசாரணைகளின் போது சந்தேக நபர் தான் சிறுமியைக் கற்பழித்துக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.
பின்னர் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேதத்தைப் பரிசோதித்த வைத்தியர்கள் கற்பழிக்கப்பட்ட பின்னர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினர்.
பொலிஸார் நடத்திய விசாரணைகளின் போது மெலும் சில உடைகளையும் ஆயுதங்களையும் காண்பிக்கவேண்டும் என சந்தேக நபர் கூறியதை அடுத்து பொலிஸார் அவரை கூட்டிச்சென்றுள்ளனர். அச்சந்தர்ப்பத்தில் சந்தேக நபர் அருகிலிருந்த நீர் நிலை ஒன்றில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரைக் காப்பாற்றச் சென்ற்ற பொலிஸார் இருவரும் அதிக அளவில் நீர் குடிபட்டதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் நடைபெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான படங்களை கீழே காணலாம்.
சந்தேக நபர் சடலமாக....