கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் சந்திரிகாவிற்கு ஆதரவளிக்க விருப்பம்
http://newsweligama.blogspot.com/2014/10/blog-post.html
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க போட்டியிட்டால், ஆதரவளிக்கத் தயார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம் இரண்டு தரப்பிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
சிறுபான்மை மக்களின் ஆதரவினை பெற்றுக்கொள்ளக் கூடிய பொது வேட்பாளராக சந்திரிகா அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முயற்சிகளில் ரணில் விக்ரமசிங்கவைப் போன்றே சந்திரிகாவும் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்குமா என்பது சந்தேகமே எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மூன்றாம் தவணைக்காக போட்டியிடுவதில் சந்திரிகாவும் சட்டச் சிக்கல்களை எதிர்நோக்க நேரிடலாம் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.