உலமாக்கள், முஸ்லிம் அமைச்சர்களின் பின்னால் புலனாய்வுப் பிரிவினரை நிறுத்துங்கள் - BBS
http://newsweligama.blogspot.com/2014/09/bbs.html
உலமாக்கள் மற்றும் முஸ்லிம் அமைச்சர்களின் பின்னால் புலனாய்வுப் பிரிவினரை நிறுத்துமாறு பொதுபல சேனா அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இன்று காலை கிருலபனை பொதுபல சேனா தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அந்த அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே இந்த வேண்டுகோளை விடுத்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்:
இந்த நாட்டிலுள்ள அணைத்து முஸ்லிம் அமைப்புக்களையும் அவதானியுங்கள். மேலும் முஸ்லிம் பல்கலைக்கழகங்கள், மத்ரஸாகளில் நடைபெறுபவைகள் தொடர்பில் முழுமையாக தேடிப்பாருங்கள்.
அதேபோன்று உலமாக்கள் வெள்ளை ஆடை அணிந்தவர்களாக காணப்படுகின்றனர். தயவு செய்து அவர்கள் பின்னல் புலனாய்வுப் பிரிவினரை நிறுத்துங்கள். அதேபோன்று முஸ்லிம் அமைச்சர்களின் பின்னாலும் புலனாய்வுப் பிரிவினரை நிறுத்துமாறு நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார். - DC