சட்டத்தை படுகொலை செய்யும் பொலிஸ் (கட்டுரை)
http://newsweligama.blogspot.com/2014/09/blog-post_31.html
83ம் ஆண்டு ஜூலை கலவரத்தையும் 2014ம் ஆண்டு கறுப்பு ஜூன் கலவரத்தையும் நினைவூட்டும் முகமாக கொழும்பிலிருந்து அளுத்கமை வரையான சமாதானத்திற்கான மோட்டார் சைக்கிள் ஊர்வலமொன்று ஐக்கிய சமதர்ம கட்சியின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்வூர்வலத்தை தீவிரவாத பௌத்த பிக்குகளின் அச்சுறுத்தல் காரணமாக இடைநடுவில் நிறுத்த வேண்டி ஏற்பட்டது.
நடு வீதியில் தீவிரவாதிகளினால் குறுக்கீடு இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அங்கு வந்த பொலிஸார் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாமையினால் சமாதான ஊர்வலத்தை இடைநடுவில் நிறுத்தி விட்டுச் செல்லுமாறு வேண்டிக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து வடக்கின் ஊடகவியலாளர்கள் சிலரை அழைத்து இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தில் நடத்துவதற்கு ஆயத்தப்படுத்திய செயலமர்வுக்கு எதிராக சில பேரைக் கொண்ட குழுவொன்று ஆர்ப்பாட்டம் செய்தபோதும் பொலிஸார் கூறியது, பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத காரணத்தினால் செயலமர்வை நிறுத்துமாறாகும். அதற்கு முன்னர், கிரிதலை மற்றும் நீர்கொழும்பு ஆகிய இடங்களிலும் இவ்வாறான செயலமர்வுகளை நடாத்த முயற்சித்தபோதும் அவையும் இவ்வாறே இடைநிறுத்தப்பட்டது.
சில காலத்திற்கு முன், சர்வதேச பல்கலைக்கழக மாணவர் அதிகார சபை கொழும்பில் சமாதான பாதயாத்திரை ஒன்றை நாடத்துவதற்கு திட்டமிட்டிருந்தபோது, சட்ட நீதிமன்றத்திற்கு முன்னால் சென்ற பொலிஸார் கேட்டுக் கொண்டதும், இந்தப் பாத யாத்திரைக்கு மூன்றாந் தரப்பொன்று தாக்குதல் நடத்துவதற்கு ஆயத்தமாக இருப்பதாக புலனாய்வுப் பிரிவு தகவல் தெரிவித்திருப்பதால் பாத யாத்திரையை நிறுத்துமாறுமாகும். அவ்வாறான மூன்றாம் தரப்பொன்று இருக்குமானால், அவ்வாறான தகவலும் பொலிஸாருக்கு கிடைக்குமாகுமிருந்தால், அவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது ஏன்? என்ற கேள்வியைக் கேட்காமலேயே சட்ட நீதிமன்றம் பொலிஸார் கேட்டுக்கொண்ட கட்டளையை உடனே அமுல்படுத்தியமையாகும்.
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக கடந்த காலத்தில் இடம்பெற்ற எதிர்ப்புப் பிரசாரம் ஒன்றை கொண்டு வந்த சந்தர்ப்பத்தில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சமாதான பாதயாத்திரை ஒன்று செல்வதற்கு ஆயத்தமாகி நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த சட்ட ஊழியர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இணைந்த அதிக பிரிவினருக்கு பொலிஸார் கூறியதும், பாத யாத்திரை சென்றால், கம்பு, தடிகளுடன் குண்டர்கள் ஆயத்தமாகி இருப்பதனால் பாத யாத்திரையை நிறுத்துமாறுமாகும்.
இந்தச் சம்பவங்களை பார்க்கும்போது, இலங்கையில் இருப்பது புதுமையான ஒரு பொலிஸ் என்பது புரியவில்லையா?
வெகுஜன ஊடகங்கள் போன்ற பிற விடயங்கள் குறித்து விழிப்புணர்வு உள்ளவர்கள் சமாதானமாக ஒன்றுகூடுவதற்கு இருக்கும் உரிமையை அனுபவித்துக் கொண்டு, கல்வியை மேம்படுத்தும் முகமாக நடத்தும் செயலமர்வுகளுக்கு எதிராக யாரோ பதவியிலுள்ள ஒருவரின் அறிவுருத்தலுக்கமைய அங்கு வந்து கழகம் செய்யும் குண்டர்களை விரட்டியடித்து செயலமர்வை தடையின்றி நடத்திச் செல்ல உதவுவதற்குப் பதிலாக பொலிஸார் அறிவுரை கூறுவது அந்த செயலமர்வுகளை நிறுத்துமாறு ஆகும். மக்களின் சமாதான ஆர்ப்பாட்டங்களின் போது தாக்குதல்களிற்கு ஆயத்தமாக இருக்கும் கழகக்காரர்களை அதிகாரத்தைப் பயன்படுத்தி அல்லது பயன்படுத்தாமல் அங்கிருந்து விரட்டியடிப்பதற்குப் பதிலாக பொலிஸார் சொல்வது ஆர்ப்பாட்டத்தை நிறுத்தி விட்டு கலைந்து செல்லுமாறு ஆகும். இனப்பிரச்சினைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின்போது பொலிசார் பாதுகாப்பை வழங்குவது சமாதான ஆர்ப்பாட்டங்களுக்கு அன்றி கம்பு தடிகளை எடுத்துக் கொண்டு தூசன வார்த்தைகளால் திட்டி கோஷமிடும் குண்டர்களுக்கு தான் என்பதை அனைவரும் நன்கறிவர்.
பொலிஸ் இருப்பது எதற்காக? பொதுமக்கள் தங்கள் சட்டபூர்வமான உரிமைகளை அனுபவித்துக் கொண்டு சமூக செயற்பாடுகளை தடைகளின்றி செயற்படுத்த ஒத்துழைப்பு வழங்கவா? அல்லது குண்டர்களுக்கு பதிலாக இருந்து கொண்டு சமூகத்தின் செயற்பாடுகளை சீர்குலைப்பதற்காகவா? புரியும் விதத்தில் பார்த்தால், சந்தேகமின்றி இரண்டாவது விடயத்திற்கு ஆகும். யாரோ ஒருவரின் செயற்பாட்டின் அடிப்படையில் இந்த குண்டர்கள் வருவது கலகங்களை ஏற்படுத்தி சமாதானமாக, சட்டத்தின்படி மக்கள் செய்யும் நடவடிக்கைகளை குழப்புவதற்காகும். போலிஸாரும் அவர்களின் சார்பாக இருப்பதனால் தெளிவாக தெரியும் விடையம் என்ன வென்றால் பொலிஸாரும் இயங்குவது குண்டவர்களின் ஏவுதல் மூலம் என்பதேயாகும்.
நிறைவேற்றும் பிரிவொன்றாக பொலி;ஸ் இருப்பது நாட்டின் சட்டஒழுங்கை நடைமுறப்படுத்துவதற்காகும். அந்த சட்டஒழுங்கை குழப்புவதற்கு எந்த ஒருவரையும் பொலிஸார் கவனிக்க வேண்டியது விரோத செயற்பாடுடனேயாகும். என்றாலும் எமது நாட்டில் பொலிஸார் இவ்வாறு சட்டஒழுங்கை மீறுவோருடன் மிகவும் நெருக்கமாகவே உள்ளனர். பாதுகாப்பை வழங்குவதும் அவர்களுக்கே. இவ்வாறான பொலிஸ் நாட்டிற்கு எதற்கு? அவ்வாறான பொலிஸ், பொலிஸ்மா அதிபர் எதற்கு? தாம் செலவலிக்கும் ஒவ்வொரு ரூபாவிலும் எழுபது சதத்திற்கு கிட்டிய தொகையை வரியாக செலுத்தும் நாட்டு மக்களுக்கு இவ்வாறான பொலிஸ் ஒன்றை பராமரிக்க வேண்டியது தேவைதானா?
நன்றி – ராவய பத்திரிக்கை
தமிழ் மொழிபெயர்ப்பு – சிராஜ் .எம். சாஜஹான்