தேர்தல்களின் போது அரச சொத்துக்களை பயன்படுத்துகின்றன - ஆணையாளர் குற்றச்சாட்டு
http://newsweligama.blogspot.com/2014/09/blog-post_44.html
ஒவ்வொரு தேர்தல்களிலும் ஆளும் கட்சிகள் அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தி வருகின்றன. அரச வாகனங்கள் மற்றும் அரச பணியாளர்கள் என இந்த சொத்துக்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல்களின் போது தேர்தல்கள் அதிகாரிகளால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்ற போதும் அவற்றை ஆளும் கட்சிகள் மதிப்பதில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊவா மாகாணசபை தேர்தலை பொறுத்தவரையில் தாம் அமைச்சுக்களில் உள்ள அரசாங்க அதிகாரிகள், திணைக்களங்களில் உள்ள அதிகாரிகள் போன்றோருக்கு உத்தரவுகளை பிறப்பித்த போதும் அவை பின்பற்றப்படுவதில்லை என்று மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொலிஸ் மா அதிபா என் கே இலங்கக்கோன் தமது உறுதியளித்துள்ளதாகவும் தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
எனவே எதிர்வரும் தேர்தல் சுதந்திரமானதாகவும் நேர்மையானதாகவும் நடைபெறும் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.
இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இந்தக்கருத்துக்களை வெளியிட்டார்.