ஆபாச பட நடிகையின் புகைப்படத்துடன் பல்கலைக்கழக மாணவர்களுக்கான புத்தகம்

http://newsweligama.blogspot.com/2014/09/blog-post_70.html

பல்கலைக்கழகத்தில் கணிதப்பாட புத்தகத்தின் முன் அட்டையில் ஆசிரியை ஒருவரின் படத்தை பிரசுரிப்பதற்கு புத்தக வெளியீட்டாளர்கள் விரும்பினர். ஆனால், அவர்கள் தவறுதலாக ஜப்பானைச் சேர்ந்த ஆபாசப்பட நடிகையொருவரின் படத்துடன் புத்தகத்தை அச்சிட்டு 10 பல்கலைக்கழகங்களுக்கு விநியோகித்துள்ளனர்.
சுமார் 3000 புத்தகங்கள் விநியோகிக்கப்பட்ட பின்னரே இத்தவறு கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அப்புத்தகங்களை மீளப்பெற்று புதிய அட்டையுடன் புத்தகத்தை வெளியிடுவதற்கு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். -MN