மட்டக்களப்பு வாவியில் சீ பிளேன் விபத்து: உயிர் தப்பிய சுற்றுலாப் பயணிகள் - Photos
http://newsweligama.blogspot.com/2014/09/photos_18.html
மட்டக்களப்பு நகரின் வாவிப் பகுதியில் உல்லாசப் பிரயாணிகளை ஏற்றிவந்த சீ பிளேன் இன்று பிற்பகல் விபத்துக்குள்ளானது.
வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளை ஏற்றிக்கொண்டு வந்த சீ பிளேனே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
வாவியில் உள்ள கற்பாறையில் சிக்குண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது அதில் பயணம் செய்த உல்லாசப் பிரயாணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உல்லாசப் பிரயாணிகள் வருகை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக சீ பிளேன் சேவையும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீ பிளேனை திருத்துவதற்காக விமானப் படையின் தொழில்நுட்ப விமானம் வரவழைக்கப்பட்டு, சீர் செய்து பின்னர் மீண்டும் சேவையினை ஆரம்பித்தது.