வீட்டுக்கு வரமாட்டேன்...சந்தோஷமா இருக்கேன்: 15 வயது ஜிகாதி (வீடியோ இணைப்பு)

http://newsweligama.blogspot.com/2014/10/15.html

ஈராக் மற்றும் சிரியாவின் பல பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ், இணையதளத்தின் மூலம் தங்களது அமைப்பில் உலக நாடுகளிலிருந்து ஆள் சேர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆஸ்திரியாவைச் சேர்ந்த சபினா செலிமோவிக்(Sabina Selimovic Age-15), சம்ரா கெசினோவிக்(Samra Age-17) ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்துள்ளனர்.
மேலும் தங்களை யாரும் தேட வேண்டாம் என்றும் தாங்கள் புனித போரில் அல்லாவுக்காக சேவை செய்யப் போவதாகவும் கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர்.
நாளடைவில் ஐ.எஸ்.ஐ.எஸ்-யின் கொள்கைகள் தீவிரமடைந்ததை தாங்க முடியாததால் இவர்கள் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் வீட்டிற்கு செல்ல விருப்பமில்லை என கூறிய சபினா செலிமோவிக், தற்போது தனக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் மிகவும் பிடித்திருப்பதாக பிரான்ஸின் பிரபல நாளிதழ் ஒன்றிற்கு குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் மிக மகிழ்ச்சியாக உள்ளேன். இங்கு எனக்கு ஹலால் உணவு வழங்கப்படுகிறது.
இந்த போரில் கலந்து கொள்வது எனக்கு பெருமையை தருகிறது என்றும் நான் கர்ப்பம் என முன்பு வெளியான தகவல்கள் உண்மையல்ல எனவும் அந்த குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு சபினா கூறியது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டாயத்திற்கு உட்பட்டு இருப்பதாகவும், மரண பயத்தில் சிறுமி இதை கூறியிருக்கலாம் என ஆஸ்திரிய நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.