இந்தோனேசிய கடற்பரப்பில் மலேசிய விமானத்தின் பாகங்கள்?
http://newsweligama.blogspot.com/2014/10/blog-post_53.html
மாயமான மலேசிய விமானமான MH370யின் பாகங்கள் இந்தோனேசியாவின் கடற்பரப்பில் மிதப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு 239 பேருடன் கடந்த மார்ச் 8-ம் திகதி புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமானது.
அந்த விமானம் அவுஸ்திரேலிய கடற்பரப்பில் விழுந்திருக்கலாம் என்று கருதப்பட்டதையடுத்து கடந்த 6 மாதங்களாக தேடுதல் வேட்டை நடைபெற்றது.
இந்த தேடுதல் வேட்டையில் இதுவரை எவ்வித தடயமும் கிடைக்காத நிலையில், இந்தோனேசியாவின் கடற்பரப்பில் விமான பாகங்கள் மிதப்பதாகவும் அதனை உள்ளூர் மீனவர்கள் கண்டெடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், தற்போது இந்த தகவல்களை உறுதி செய்ய அவுஸ்திரேலிய கடற்படை வீரர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்துள்ளனர்.